பெருமழை முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
திருச்சியில் இன்று புதிய பன்னாட்டு விமான முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்க உள்ளனர்.பிரதமர் மோடி வருகையையொட்டி பாஜகவினர் திருச்சியில் குவிந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக காந்தி மார்க்கெட் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது ;- பிரதமருக்கு பிடித்த தூய்மை இந்தியா திட்டத்தை திருச்சிக்கு பிரதமர் வரும் நேரத்தில் இன்றைய நாளில் 75 இடங்களில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், தலைவர்கள், இளைஞர் அணி தலைவர் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகத்தில் குப்பைகள் அதிகளவு சேர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு குப்பைகளை அகற்றி மீண்டும் உரமாக மாற்றி பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். அதிகமான குப்பை கிடங்குகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும், குப்பைகளை அகற்றாமல் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் இன்று திருச்சிக்கு வரும் பொழுது முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர் எனும் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு அளிக்க இருப்பது தெரியவந்தது. பிரதமரை வரவேற்க முக்கிய தலைவர்கள் விரும்பினால் அவர்கள் வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள். மிக முக்கியமாக இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை கொடுத்தும், தமிழ்நாடு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள். இது தமிழ்நாடு அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.
இன்று திருச்சியில் 2வது புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மிக முக்கியமாக பெரிய விமானங்கள் இனி திருச்சி விமான நிலையத்திற்கு வரும். மேலும் அதிக அளவில் விமான போக்குவரத்து பல்வேறு நாடுகளுக்கு இதன் மூலம் இயங்கும், என தெரிவித்தார்.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
This website uses cookies.