சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல அவசரம் ஏன்? யாரை காப்பாற்ற என்கவுன்டர்? இபிஎஸ் சந்தேகம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2024, 11:42 am

வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர் பெறுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் மீது திமுகவுக்கு கவலையே இல்லை. திமுகவுக்கு ஆட்சி அதிகாரமும் இந்தியா கூட்டணியும் தான் முக்கியம். கூட்டணி முக்கியம் என்பதற்காக காவிரி நீர் பெறுவது தொடர்பாக முதலமைச்சர் குரல் கொடுக்கவில்லை.

கர்நாடக அரசு உரிய நீரை வழங்க வேண்டும்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மக்களவை தேர்தலில் பொன்முடி தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல வேண்டிய அவசரம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 240

    0

    0