அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்..? என்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் யுவராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு, கூட்டணி என அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மறு பக்கம் அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்சி தாவி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை வேகமாக திமுக முடித்து வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணியை தனித்தனியே வலுப்படுத்தும் பணிகளை இறங்கியுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த த.மா.கா தலைவர் ஜிகே வாசன், பாஜக கூட்டணியில் இணைவதாகவும், ஒரு தொகுதி, ராஜ்யசபா பதவி கேட்டுள்ளதாக கூறினார். நேற்று ஜிகே வாசன் தலைமையில் த.மா.கா ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது, பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தமாகாவின் பெரும்பாலான நிர்வாகிகள் முடிவுக்கு மதிப்பு தராமல், பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அறிவித்திருப்பது தமாகா நிர்வாகிகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிறிது நேரத்திலேயே, தமிழ் மாநில காங்கிரஸின் மாநில செயலாளர் யுவராஜ், சேலத்தில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பாஜகவுடன் ஜிகே வாசன் இணக்கமான நட்புறவில் இருந்த போதே, பிரதமர் மோடியையும் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தவர் யுவராஜ். எனவே, பாஜகவுடனான கூட்டணியை அவர் விரும்பவில்லை என்று தெள்ளத் தெளிவாகியுள்ளது. மேலும், தமாகாவில் இருந்து விலகி யுவராஜ் அதிமுகவில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியது. அதேவேளையில், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க தயாராவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்..? என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் யுவராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் த.மா.கா. அ.தி.மு.க. கூட்டணியோடு இணைத்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தலைவர் ஜிகே வாசன் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்இத்து அறிவித்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.