வளர்ப்பு மகனுக்கு எதுக்கு Z பிரிவு? Y பிரிவே போதுமே.. அண்ணாமலையை சீண்டிய நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 4:18 pm

ஒவ்வொரு கட்சியிலும் பல தொண்டர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள், தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது அவர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? என நடிகை கேள்வி எழுப்பியுள்ளார்.

காயத்ரி ரகுராம், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்களை காயத்ரி ரகுராம் முன் வைத்தார்.

இதையடுத்து அண்மையில் காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்தது. இந்த நிலையில் அண்ணாமலையை இன்டர்வியூ எடுக்க வேண்டும் என காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார். மேலும் நேருக்கு நேர் அண்ணாமலை தன்னுடன் பேச தயாரா என்றும் கேட்டிருந்தார்.

அதன் பின்னர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.

என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும்.

பின்னர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதற்கும் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று தனது ட்விட்டரில், கடந்த இரண்டு வருடங்களில் கர்நாடகா வாரிசு சக்தி வார்ரூம் யூடியூப் மூலம் பல லட்சங்கள் கோடிகளை செலவழித்து பாஜகவிற்குள் நுழைந்துள்ளது. எனது ட்வீட்களுக்கு எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் மற்றும் பிரபல செய்தி தொலைக்காட்சியில் பதில் இல்லாமல் அண்ணாமலை தனது கதறலை வார்ரூம் மூலம் அவிழ்த்துவிட்டார்.

இப்போது அண்ணாமலையின் வார்ரூம் என்னை திமுக ஸ்லீப்பர் செல் என்று அழைக்க முடியவில்லை.அதனால் இப்போது அவர்கள் என்னை கெட்ட வார்த்தைகள் சொல்லியும், என்னை பைத்தியம் என்றும், என் பெண்மையை அவமானப்படுத்துகிறார்கள். சூப்பர் ஆ ஹிந்து தர்மத்தை மற்றும் சித்தாந்தத்தைப் பரப்புகிறார்கள்.

பல உண்மையான காரியகர்த்தாக்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர், இப்போதும் கூட ஒவ்வொரு கட்சியிலும் பல தொண்டர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள். தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருமுறை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கொடுத்தால், தேசத்திற்காக உயிரை தியாகம் செய் கேலி செய்தார்கள்.

இப்போது வளர்ப்பு மகன் அழுதுகொண்டே கெஞ்சி Z பிரிவு பாதுகாப்பைக் கோரினார், வளர்ப்பு மகனுக்கு தந்தையால் இப்போது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது அச்சுறுத்தலுக்காக அல்ல, வீணான விளம்பரதாரர்களுக்காக.

Y பிரிவு பாதுகாப்பு போதாதா? ஏன் இவ்வளவு ஆடம்பரம்? தமிழ்நாட்டையே தமிழகம் என்று அழைக்க பெருமைமிக்க கன்னடருக்கு நம் பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக ஏழை எளிய சாமானியர்களுக்கு அதே பணத்தை செலவழித்திருக்கலாம். இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…