கட்டிய மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்.. ரகசிய சந்திப்பால் வெளிச்சத்திற்கு வந்த கடத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2024, 4:24 pm

கட்டிய மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலபாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபிரியா. இவர் இளம் வயதில் கணவரை இழந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 2009 ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இடம் பார்க்க வந்த சிவகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு 2010ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சிவகுமார் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணியில் மாவட்ட தலைவராக உள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் சிவகுமார் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவில் இருப்பது தெரிந்து இருவருக்குள்ளும் பிரச்சனை எழுந்ததுள்ளது.

இந்த பிரச்சனை காலப்போக்கில் மனைவியை கடத்தும் அளவிற்கு வந்து, பாஜக பிரமுகர் சிவகுமார் ஆட்களை வைத்து சொந்த மனைவியை நேற்று முன் தினம் இரண்டு காரில் வந்து, காரில் இருந்த மனைவியை வலுகட்டாயமாக வெளியே இழுத்து முகத்தை மூடிய நிலையில் இருந்த மர்ம நபர்கள் கீழே தள்ளி அவரிடம் இருந்த காரின் சாவி, கைப்பையை பறித்து, கத்தி முனையில் அடித்து காரில் கடத்திச் சென்றார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பெரும்பாக்கம் போலீசார் அவர்களை பள்ளிகரணை அருகே மடக்கி பிடித்து கடத்தப்பட்ட மனைவி லட்சுமி பிரியா, மற்றும் மகன் ரூபேஷ் ஆகியோரை மீட்டனர்.

பின்னர் இரு தரப்பையும் காவல் நிலையம அழைத்து சென்ற பெரும்பாக்கம் ஆய்வாளர் சண்முகம் பாஜக பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்குப் பதிவு செய்ய மறுத்து மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு போ என பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: ATMகளில் டேப் வைத்து நூதன கொள்ளை… பீதியை கிளப்பும் கோவை கும்பல்.. பகீர் சிசிடிவி காட்சி!!

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கிடைக்க சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் எனது கணவர் முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இது தெரிந்தும் 14 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டு அவரோடு வாழ்ந்து வந்தேன், இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் தன்னை வேண்டாமென்று கூறி விரட்டியடித்ததால், அவரை விட்டு செல்ல முடிவெடுத்து நான் அவருக்கு தொழில் செய்ய கொடுத்த 90 லட்சம் ரூபாய், 500 கிராம் தங்க நகை, உள்ளிட்டவற்றை திருப்பி தரவேண்டும் எனவும், இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தோம் அதனுடைய பங்கையும் கொடுக்க வேண்டும், மேலும் என்னை கடத்திச் சென்ற போது எடுத்துச் சென்ற 5 சவரன் தங்க நகை, கார் மற்றும் நான் கொடுத்த பணம், எனது அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும்.

அலுவலகத்தில் இருந்து மாத வருமானம் கடந்த மூன்று மாதமாக வரவில்லை இதனை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய ஆய்வாளர் சண்முகத்தை அறிவுறுத்தியதன் பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டதாக கூறபடுகிறது.

கடத்தப்படும் போது 10க்கும் மேற்பட்டோர் பெண்ணை தாக்கி அடித்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 277

    0

    0