எனக்கு அத்தான் தான் வேனும்.. அடம்பிடித்த கள்ளக்காதலி.. கும்மியெடுத்த மனைவி!
Author: Hariharasudhan16 November 2024, 6:05 pm
மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் காரில் கணவர் உடன் இருந்த கள்ளக்காதலியை மனைவி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஜிதேந்திரா மாலி – உஷா ஆர்யா என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இதில், கணவர் ஜிதேந்திர மாலிக்கு வேறு ஒரு பெண் உடன் தொடர்பு இருப்பதாக உஷா ஆர்யாவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து கணவரிடம் கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து வந்து உள்ளார்.
எனவே, நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என உஷா ஆர்யா இருந்து உள்ளார். இந்த நிலையில் தான் ஜிதேந்திரா மாலி தனது பெண் தோழி உடன் காரில் உல்லாசமாகச் சுற்றிவிட்டு, உஜ்ஜைன் சாலையில் வலம் வந்து உள்ளார். அப்போது, அதனை மனைவி உஷா பார்த்து உள்ளார்.
பின்னர், உடனடியாக காரை நிறுத்திய உஷா, கதவைத் திறந்து, உள்ளே இருந்த பெண் தோழியான பூஜா என்ற பெண்ணை சரமாரியாத் தாக்கத் தொடங்கினார். இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பூஜாவின் முடியைப் பிடித்து இழுக்கும் உஷா, அவரது கன்னத்தில் மாறி மாறி அறைகிறார். தொடர்ந்து, அவரை காரில் இருந்து வெளியே இழுத்த உஷா, மீண்டும் மீண்டும் அவரை அறைகிறார். இதனை காரினுள் அமர்ந்தவாறே முகத்தை மறைத்துக் கொண்டு அவரது கணவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமே.. மும்பை ஐகோர்ட் அதிரடி!
ஆனால், இத்தனை அமளிக்கு மத்தியிலும் பூஜா, ‘எனக்கு அவர் தான் வேண்டும். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்’ எனக் கூறுகிறார். இதனையடுத்து அடி இன்னும் அதிகமாகிறது. இதனையடுத்து, ‘நீங்கள் யார்? எனக்கு யார் என்றே தெரியவில்லை’ என பூஜா கூற, ‘நான் அதனை காவல் நிலையத்தில் சொல்கிறேன்’ என சினிமாவில் வசனம் பேசுவது போல் உஷா கூறுவதுடன் வீடியோ முடிவடைகிறது.