நோட்டாவை ஜெயிப்பாரா அண்ணாமலை? முடிஞ்சா முதல்ல அத பண்ணட்டும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டத்திற்குப் பின், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து, தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவது குறித்து, முடிவு செய்யப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வெற்று அறிக்கையாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்ற கட்சிகளை விட அதிமுகவால் மட்டுமேதான் நமக்கான உரிமைகளை பெற்றுத்தர முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைக்கு எங்களுடைய கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு பிரதிநிதிகள் வந்து, மனு அளித்திருக்கிறார்கள்.
அதிமுக இலவுக் காத்த கிளிபோல உள்ளதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது முற்றிலும் தவறானது. ருக்காகவும், எதற்காகவும் நாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறான கருத்துக்களை பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அண்ணாமலை முதலில் நோட்டாவில் நின்று வெற்றி பெறுகிறாரா பார்ப்போம். பிறகு அவரைப் பற்றி பேசுவோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு எப்போதுமே பிரதான எதிரி என்று எடுத்துக்கொண்டால் அது, திமுகதான். பாஜக என்பது ஒரு மதவாத சக்தி. அந்த மதவாத சக்தியோடு இப்போது இல்லை, எப்போதுமே கூட்டணி இல்லை என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.
வரும் மக்களவைத் தேர்தலை பொருத்தவரை எங்களுடைய கூட்டணி ஒரு மிகப்பெரிய மகத்தான வெற்றியை பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறிய ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, அதிமுகவிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை ஒரு கேள்வியாக கேட்கிறீர்களே என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.