கொள்ளையடித்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பி கொடுக்குமா திமுக? தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி : இபிஎஸ் ஆவேசம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2023, 1:22 pm
கொள்ளையடித்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பி கொடுக்குமா திமுக? தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி : இபிஎஸ் ஆவேசம்!!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் நலதிட்ட உதவிகள் வழங்கியபின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஏகமாத திருச்சபை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது பகுதி செயலாளர் கே குப்பன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதீல் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ;
மக்களின் பிரச்சணையை எடுத்து சொல்வதே எதிர்கட்சிகளின் பணி, 1240கிலோ மீட்டர் வடிநீர் கால்வாய் பணி தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2 அரை ஆண்டுகள் கிடப்பில் போட்டு கமிஷன் வாங்குவதிலேயே குறியாக அமைச்சர்கள் இருந்தனர்.
இப்படி கொள்ளையடித்த அமைச்சர் சிறையிலக பத்திரமாக இருக்கிறார். அதனால் தான் பாதிப்பு. ஏற்கனவே இருந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.
ஒருமாத ஊதியத்தை முதல்வர் வழங்கியதை விட்டு கொள்ளையடுத்ததை மக்களுக்கு செலவு செய்ய சொல்லுங்கள். பத்திரிக்கைகள் உண்மையை ஆராய்ந்து உண்மை செய்தி போட வேண்டூம்.
இந்த அரசு வந்த பிறகு தான் பணப்பட்டுவாடா செய்கின்றனர். திமுக அரசை காப்பாற்றுவது ஊடகம் தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மக்களுக்கு இழைத்த அநீதிக்கு டெபாசிட் கூட வாங்காது என காட்டமாக பேசினார்.