எதிர்க்கட்சி தலைவரா இருந்தப்ப சொன்னது இப்ப அவருக்கு ஞாபகம் வருமா? CM ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கிடுக்குப்பிடி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 8:16 pm

தமிழ்நாட்டில் நிகழும் ஆணவப்படுகொலை சம்பவங்கள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிசட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது.

தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…