இந்திய நாடு மணிப்பூர் போல மாறிவிடுவோமோ? PM மோடி பேச்சு குறித்து கனிமொழி அச்சம்!
நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் தலித் வரலாற்று மாதம் மற்றும் கலைத் திருவிழா 2024 – ன் வேர்க்கோடுகள் ஓவிய விருது 2024 விழா மற்றும் வரைகோடு தலித் கலையும் அழகியலும் ஓவியக் கண்காட்சியும் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நடைபெற்றது.
இதில் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் இயக்குனருமான பா.ரஞ்சித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, நமக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வருவது அரசியலுக்கும் கலைக்குமான தூரம் அதிகரித்து வருகிறது என்பது தான். பல விஷயங்கள் கீழே உள்ள மக்களிடம் போய் சேராமல் உள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ந்து ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை இழிவுப்படுத்தக்கூடிய வகையிலும் அதே போல காங்கிரஸ் உடைய தேர்தல் அறிக்கை இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்டது என்வும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவர்களுக்கு எந்த திட்டத்தையும் கொடுக்கக் கூடாது என்று வெறுப்பை உருவாக்க கூடிய வகையில் பிரதமர் பேசி வருவது இந்திய நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட வெறுப்புணர்வு அவசியமா என்றும் இப்படி அரசியல் லாபத்திற்காக வெறுப்பு பேச்சை பேசி வருகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஒத்துழைப்பு தராமல் இழுத்தடிக்கிறார்.. செந்தில்பாலாஜி மீது ED குற்றச்சாட்டு: Court போட்ட உத்தரவு!
தனக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்பதற்காக கூட அவர் அப்படி பேசியிருக்கலாம். தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுத்து வரக்கூடிய சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அங்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்ற கேள்விக்கு கர்நாடகா தமிழ்நாடு என்று பிரச்சினையாக நாம் பார்க்க முடியாது அதை தாண்டி இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும்.
இந்த வெறுப்பில் இருந்து இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும். கண்டிப்பாக நமக்கு தண்ணீர் வேண்டும் நமக்கும் கர்நாடகாவிற்கும் தண்ணீர் விஷயத்தில் பிரச்சனை இருப்பது உண்மைதான் அதை மறுக்கவில்லை.
அதை அனைத்தையும் தாண்டி இப்படி ஒரு வெறுப்பு மனதிற்குள் விதைக்கப்படும்போது இந்த நாடு முழுவதும் மணிப்பூர் போல மாற்றப்படுமோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.