இண்டியா கூட்டணி தாங்குமா? மம்தா பானர்ஜியின் திடீர் அறிவிப்பு : உடையும் கூட்டணி.. பதுங்கும் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 4:34 pm

இண்டியா கூட்டணி தாங்குமா? மம்தா பானர்ஜியின் திடீர் அறிவிப்பு : உடையும் கூட்டணி.. பதுங்கும் திமுக!

தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நிதிஷ் – ஸ்டாலின் உரசல்.. இப்போது மம்தா – காங்கிரஸ் உரசல் ஏற்பட்டு உள்ளது.

இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து நடந்து வரும் மோதல்கள் காரணமாக.. லோக்சபா தேர்தல் 2024 வரை இந்தியா கூட்டணி தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இருப்பதால் இந்த கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
  • Close menu