மீண்டும் மீண்டுமா? அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் 2வது முறையாக ரத்து? பரபர பின்னணி!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 5:04 pm

மீண்டும் மீண்டுமா? அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் 2வது முறையாக ரத்து? பரபர பின்னணி!

வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, இன்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனிக்கு செல்ல அமித்ஷா திட்டமிருந்தார்.தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளிலும் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும், அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்றிரவு மதுரை வருவதாக இருந்த அமித்ஷாவின் பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…