ரபேல் வாட்ச்க்கு பில் தயார் செய்ய ஏப்ரல் மாதம் வரை ஆகுமா? அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2023, 11:54 am
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:- இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது.
ஆதாருடன் மின்சார அட்டையை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும். மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஏப்ரல் மாதம் வாட்சுக்கான பில் தருகிறேன் என கூறினார் கையில் பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே.இல்லையென்றால் வெகுமதியால் வந்தது, அன்பளிப்பு கொடுத்தார்கள் என ஒப்புக்கொள்ள வேண்டியது தானே என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.