முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கெஜ்ரிவால் : அடுத்தது யார்? டெல்லி அரசியலில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 7:52 pm

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை 12-ந்தேதி கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. ஆனால் அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.

இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க: தலைவிரித்தாடும் லஞ்சம்… மக்கள் கொடுத்த புகார் : சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு!

பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவை சந்திக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்மையானவர் என மக்கள் சான்றிதழ் அளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 235

    0

    0