ஜி20 மாநாட்டில் பங்கேற்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்? மத்திய அமைச்சர் நேரில் அழைப்பு….!!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2023, 2:28 pm
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் இந்தாண்டு தலைவராக இந்தியா உள்ளது.
இந்த கூட்டமைப்பு மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வளர்ச்சி, ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இதற்கான ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதில் 20 நாட்டு முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் இந்த ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று அழைத்துள்ளார் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ். இந்த சந்திப்பானது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போதுதான் மத்திய அமைச்சர் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று முதல்வர் டெல்லி செல்வாரா என்பது பின்னர் தெரியவரும்.