கொடி பறக்குமா? பறக்காதா? விஜய்க்கு செக் வைத்த போலீஸ்.. த.வெ.கவினர் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 6:28 pm

சினிமாவில் இருந்து விரைவில் விலக உள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, கடந்த 22ஆம் தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.

இந்த கொடியை அறிமுகம் செய்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்களும், புகார்களும் அவர் மீது எழுகின்றன.

கொடியில் உள் யானை சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, கட்சி கொடியின் நிறம் ஸ்பெயின் நாட்டு கொடியின் நிறம் என்றும் விமர்சிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு தலைவலி விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில், 234 தொகுதிகளிலும் கொடியை ஏற்றவும், தங்களது இல்லங்களில் பறக்க விடவும் தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு; பொது இடங்களில் கட்சி கொடியை ஏற்ற காவல்துறையிடம் உரிய அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் பல இடங்களில் அனுமதி பெறாமல் கொடியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழ் இணைக்கப்படாததால் அனுமதி ரத்து என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!