ROAD SHOW நடத்தினால் ஓட்டு கிடைச்சிருமா? பேட்டி கொடுப்பது மட்டுமே அவரோட வேலை : இபிஎஸ் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 7:17 pm

ROAD SHOW நடத்தினால் ஓட்டு கிடைச்சிருமா? பேட்டி கொடுப்பது மட்டுமே அவரோட வேலை : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சி அளிக்கிறது. பொள்ளாச்சி நகரம் குலுங்கும் வகையில் மக்கள் வெள்ளம் கூடியிருக்கின்றன.

இது தேர்தல் பிரசாரம் கூட்டம் அல்ல. வெற்றி விழா கூட்டம்போல் காட்சியளிக்கிறது. வேட்பாளரின் வெற்றி இந்த எழுச்சியில் இருந்து பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் அதிமுக 2, 3-ஆக போய்விட்டது என்று கூறுகிறார். பொள்ளாச்சி வந்து பாருங்கள். அதிமுக எப்படி இருக்கிறது என்று தெரியும். ஒன்றாக இருக்கிறது என்பது மக்கள் வெள்ளமே சாட்சி. அம்மா மறைவிற்குப் பிறகு அதிமுக-வை மு.க. ஸ்டாலின் உடைக்க, முடக்க முயற்சி செய்தார். ஆனால் உங்கள் ஆதரவோடு அனைத்தும் தவுடுபொடியாக்கப்பட்டது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை. நம்முடைய தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள்.

சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். கூட்டுப் பொறுப்போடு தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓடஒட விரட்டி வெற்றிக் கொடிகளை நாட்டுவோம்.

மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள்.

இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது.பா.ஜ. கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார்.

பேட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டி கொடுத்து தலைவர் மக்களை ஈர்க்க பார்க்கிறார். இன்று தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள்.

ஆனால் இந்த தலைவர் டெக்னிக்கலாக அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களை நம்பவைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது அதமிழகத்தில் எடுபடாது.

இங்கு உழைக்கின்றவர்களுக்குதான் மரியாதை உண்டு. மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக., எவ்வளவு பேட்டிகளில் கொடுத்தாலும் ஒன்றும் எடுபட போவதில்லை என அவர் அண்ணாமலையை சாடினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…