கூட்டணியில் இருந்து விலகல்? 2024 நாடாளுமன்ற தேர்தலில் மநீம தனித்து போட்டி? கமல்ஹாசன் ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 10:59 am

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் “2024 நாடாளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்’ வருகிற 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2 மணியளவில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா என ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 396

    0

    0