ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2024, 12:10 pm

துணியில்லாமல நிர்வாணமாக கோவிலுக்கு நுழைய முயன்ற பெண் அகோரி தடுத்து நிறுத்தப்பட்டதால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெண் அகோரினி நாகசாது. பிரபல கோவில்கள், மடங்கள் ஆகியவற்றிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நாகசாது இன்று காலை தன்னுடைய காரில் காலஹஸ்தி கோவிலுக்கு வந்தார்.

திடீரென்று காளகஸ்தி கோவில் வளாகத்தில் ஆடை இல்லாமல் வளம் வந்து அவரைப் பார்த்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை தடுத்து நிறுத்த ஊழியர்கள் முயற்சி மேற்கொண்ட போது அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்த அகோரினி நாகசாது என்னை தடுத்து நிறுத்தினால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

மேலும் தயாராக கேனில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை தன் மீதும் தன்னுடைய கார் மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

இதனால் பதறிப்போன பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை எடுத்து வந்து அவர் மீது ஊற்றி தீக்குளிக்க இயலாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த பெண் ஊழியர்கள் அகோரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு ஆடைகளை கொடுத்து அணிய செய்தனர்.

பெண் அகோரினி கோவில் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!