சனாதனத்தை காப்பாற்றாவிட்டால் முதல்வரை சும்மாவிடமாட்டேன் : மிரட்டும் பெண் அகோரி!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2024, 11:16 am

சனாதனதை காப்பாற்ற தவறவிட்டால் முதலமைச்சரையும், பிரதமரையும் சும்மாவிடமாட்டேன் என பெண் அகோரி எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திராபுரம்
பீமேஸ்வர சாமி கோவிலுக்கு சென்ற பெண் அகோரி கோயிலில் பீமேஸ்வர சாமியை தரிசித்தார்.

கடந்த சில நாட்களாக தெலங்கானா, மகாராஷ்டிரா சுற்றுபயணம் மேற்கொண்ட பெண் அகாரி இரண்டு நாட்களாக ஆந்திராவில் வலம் வருகிறார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பெண் அகோரியை காண பக்தர்கள் குவிந்தனர்.

பீமேஸ்வர சாமியை தரிசனம் செய்து விட்டு காக்கிநாடா ஸ்ரீ பீடத்திற்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் பொது மக்களிடம் பேசுகையில்
இந்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், பசுக் கொலைகளைத் தடுக்கவும், சிறுமிகள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல்களைத் நிறுத்த வேண்டும்.

முதல்வராகட்டும், பிரதமராகட்டும் இந்த தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அவர்கள் பதவிக்கு ஆச்சுறுத்தல் ஏற்படும். என் முன் எவருக்கும் பலனில்லை, கட்டாயம் அந்த பதவிகளை பறிக்க செய்வேன். உலக நலனுக்காக ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று வருகிறேன் என அவர் தெரிவித்தார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!