‘விசிகவில் தலைவிரித்தாடும் சனாதனம்’.. படாரென பேசிய பெண் நிர்வாகி ; வெடவெடத்துப் போன திருமா.. டக்கென மைக்கை ஆஃப் செய்த நிர்வாகி..!!
Author: Babu Lakshmanan24 November 2022, 12:03 pm
சென்னை ; விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடந்தக் கூட்டத்தின் மேடையில், பெண் நிர்வாகி பேசியதை கேட்டு, திருமாவளவன் அதிர்ச்சியடைந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகி நற்சோனை தலைமையில், திருமாவளவன் மணி விழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
திருமாவளவன் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்த போது பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை, திருமாவளவன் பெயரை சொல்லி நன்கொடைகள் வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், மாவட்ட ஆண் நிர்வாகிகள் பெண்களை மிக கேவலமாக திட்டுவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை இருப்பதாக பகிரங்கமாக சாடினார். மேடைக்கு மேடை சனாதான எதிர்ப்பு பேசி வரும் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளே சனாதானம் இருப்பதாக அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே, நற்சோலை பேசிக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்த ஆண் நிர்வாகி ஒருவர், மைக்கை ஆப் செய்து விட்டார். அப்போது நற்சோனைக்கு ஆதரவாக அரங்கில் அமர்ந்திருந்த மகளிர் பலர் எழுந்து நின்று குரல் கொடுத்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.