மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
Author: Babu Lakshmanan7 July 2023, 8:21 pm
மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் பேசிய முதமைச்சர் ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதாகவும், இந்தத் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனப் பெயர் சூட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பயனாளிகளுக்கான தகுதிகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
குடும்ப அட்டையில் குடும்பத்தலைவராக குறிப்பிட்டுள்ள பெண் குடும்பத்தலைவியாக கருதப்படுவர்.
ஆண் குடும்பத்தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரின் மனைவி குடும்பத்தலைவியாக கருதப்படுவர்.
திருமணமாகாத, தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் குடும்பத்தலைவிகளாக கருதப்படுவர்.
குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் குடும்பத்தினர் ஒருவரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பொருளாதார தகுதிக்கான தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களை இணைக்க தேவையில்லை. ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க முடிவு
மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை.
ரூ.1000 உரிமைத்தொகை பெற தகுதி இல்லாதவர்கள் யார் யார்..?
5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை
வருமான வரி செலுத்துவோர் மற்றும் தொழில்வரி செலுத்துவோர்
சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.
பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளி உரிமைத்தொகை வழங்கப்படாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.