திமுக போராட்டத்தின் போது டூவீலரில் வந்த பெண்கள் மீது தாக்குதல்…. பதிலுக்கு தெறிக்கவிட்ட பெண்கள்…!! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
19 February 2022, 7:30 pm

சென்னையில் திமுக போராட்டத்தின் போது, அவ்வழியாக பைக்கில் வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெசன்நகர் 179வது வார்டுக்குட்பட்ட வார்டில் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக திமுக வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள், சாலையோரமாக போராட்டக்காரர்களை கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த ஒருசிலர், அந்தப் பெண்களின் வாகனத்தை இழுத்து தள்ளி வம்புக்கு இழுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண்களும் பைக்கில் இருந்து இறங்கிச் சென்று பதிலுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதனால், அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த சிலர் பெண்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, திமுக போராட்டத்தின் போது பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!