நிலச்சரிவு வரப்போகிறது காப்பாற்றுங்கள்: முதல் போனில் பல உயிர்களை காப்பாற்றி தன் உயிர் கொடுத்த தேவதை…..!!
Author: Sudha5 August 2024, 4:55 pm
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 380 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போன 200 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஒரு பெண்ணின் ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நீது ஜோஜோ எனும் அந்த பெண் நிலநடுக்கம் வந்ததை பற்றி முதலில் அறிவித்து நிறைய பேர் உயிரை காப்பாற்றுவதற்கு காரணமாக அமைந்து தன்னுடைய உயிரை தியாகம் செய்திருக்கிறார்.
முப்பதாம் தேதி இரவு சூரல்மலை பகுதியில் உள்ள அவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. சுதாரித்துக் கொண்ட நீது அவர் செயல் அதிகாரியாக பணிபுரியும் நிறுவனத்திற்கு போனில் அழைத்து தன்னுடன் பணிபுரிபவரிடம் எப்படியாவது எங்களை காப்பாற்ற வேண்டும் இங்கு நிலச்சரிவு வந்துவிட்டது.வீட்டிற்குள் வெள்ளம் வந்து விட்டது என கேட்டுள்ளார். இதுதான் நிலச்சரிவு குறித்து வந்த முதல் போன் கால் என சொல்லப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் மீட்க வருவதற்குள் இரண்டாவது முறை ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணோடு புதைந்து போனார் நீது. அவருடைய உடல் சூரல்மலை பகுதியில் இருந்து மீட்கப்பட்டது .
நீதுவின் கணவர்,மகன்,அருகில் வசிப்போர் என நிறைய பேர் அருகில் இருந்த மலையில் ஏறி தப்பித்து விட நீது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய போன் கால் ஆடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.