மகளிர் விரும்பினால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கலாம்? தமிழக போக்குவரத்துறை வாய்மொழி உத்தரவு? வெளியான புதிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 5:09 pm
Bus Fare - Updatenews360
Quick Share

தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி, ” பெண்கள் ஓசி-யில் பயனக்கிறீங்க”; என்று பேசியது சர்ச்சையானது. அதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ” நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று சொல்லி கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த சம்பவம் பூதாகாரமானது.

அதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் பெண்கள் சிலர் இலவசமாக பயணிக்க விரும்பாமல் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கி பயணித்தனர். மேற்கண்ட சம்பவங்களின் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பை வாய்மொழியாக வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதில், அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என்று மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என்று அனைத்து நடந்துநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

அதுகுறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ” அதுபோன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என்றும் பெண்கள் சிலர் இலவசமாக பயணிப்பதை விரும்பாமல் நடத்துனரிடம் டிக்கெட் கேட்கும் சம்பவத்தை குறித்து விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், அரசியல் லாபத்திற்காக சிலர் பெண்களை தூண்டி விட்டு இலவச கட்டணம் வேண்டாம் என கூற வைத்த சம்பவத்திற்கு பின்னர் தமிழக அரசு கட்டணம் செலுத்த விரும்பும் பெண்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டிருந்தால் அது சரியான முடிவு என்று கூறுகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 400

    1

    0