பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: கொந்தளித்த மக்கள்:அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை….!!

Author: Sudha
15 August 2024, 2:47 pm

மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவி ஒருவர் மறுநாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். ர்

இந்த நிலையில், ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனயை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பலரும் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

மருத்துவமனைக்குள் தடையை மீறி நுழைந்தன போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசியதுடன், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மருத்துவமனையை சேதப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவி கொலை சம்பவத்தில் கொல்கத்தா போலீஸ் என்ன செய்யவில்லை?ஆனால், வதந்தியால் இந்த சம்பவம் திசைதிருப்பப்படுகிறது. நான் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, என கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் தெரிவித்தார்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 361

    0

    0