புதிய நாடாளுமன்றத்தில் தாக்கலான மகளிர் மசோதா : திமுக எம்பி கனிமொழி சொன்ன காரசாரமான கருத்து!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2023, 5:59 pm
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கலான மகளிர் மசோதா : திமுக எம்பி கனிமொழி சொன்ன காரசாரமான கருத்து!!
புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். . இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்த நிலையில், எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இருப்பினும், மத்திய பாஜக அரசு மீது விமர்சனமும் வைக்கப்படுகிறது.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனிமொழி எம்பி, மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக கண் துடைப்புக்காக கொண்டு வந்துள்ளது. தேர்தல் வாக்கு வங்கிக்காக மசோதா பயன்படுத்தப்படுகிறது என மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விமர்சித்துள்ளார்.