மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு : வெளியான அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 1:58 pm
women
Quick Share

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை மூலம் ஏற்கனவே 1.15 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 – 25ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை வேண்டி மேல்முறையீடு செய்தவர்களில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன என இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

விரிவுப்படுத்தப்பட உள்ள இத்திட்டம் மூலம் 2.50 லட்சம் பெண்கள் பயனடைவார்கள எனக் கூறப்பட்ட நிலையில், 1.48 லட்சம் பேர் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 133

0

0