சென்னையில் அரசு மாணவர் விடுதி உணவில் புழு… தமிழகம் முழுவதும் இதே அவலம்தான்… இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் புகார்

Author: Babu Lakshmanan
24 March 2022, 9:31 am

சென்னை – ராயபுரத்தில் உள்ள ஆராய்ச்சி மாணவர் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற எழை எளிய மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள். ஆனால், மாணவர்களின் நலன்களில் எந்தவொரு அக்கறை இல்லாமல் இருக்கும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் விடுதிகள்‌ அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய நிதி ஒழுங்காக பயன்படுத்துவதும் கிடையாது.

அதே போல் தரமான உணவும் கொடுப்பதில்லை,தொடர்ந்து உணவில் புழு,கல் ஒரு சில நேரங்களில் வேகாத சோற்றை போடுகிறார்கள். இதனால் மாணவர்கள் உடல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். விடுதி காப்பாளர் மற்றும் சமையலரிடம் சொல்லியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு சிலநாள் தவறுவது சரி. ஆனால்‌, தினமும் இதே நிலையிலிருந்தால் என்ன செய்வது, ஆராய்ச்சி மாணவர் விடுதியியே இந்த நிலை இருந்தால்,தமிழகம் முழுவதும் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியின் நிலை பெரும் அவலம் தான்..

விடுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் உள்ளது. அனைத்து விடுதிகளையும் சீர்படுத்த அரசு ‌ உடனடியாக சிறப்பு ‌ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனைக்கு வழிவகுக்கும் வகையில் அவர்களின் நலனிற்கு துணை நிற்பது தமிழக அரசின் தலையாயக் கடமை ஆகும், என தெரிவித்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1546

    0

    0