குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் ஆபரேசன் ; மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி… தந்தை போலீஸில் புகார்!!
Author: Babu Lakshmanan24 November 2022, 1:07 pm
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (25), என்பவரது மனைவி கார்த்திகாவுக்கும் (23) கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் கடந்த ஆண்டு நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், மீண்டும் நேற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனுக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இது குறித்து அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது குறித்து குழந்தையின் தந்தை மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றிய செய்த அதிர்ச்சி சம்பவம் எதிரொலியாக சைல்டு்லைன் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.