ஷாரூக் இருக்காரே; WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா; வைரலாகும் பதிவு

Author: Sudha
14 July 2024, 11:35 am

ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி சீனா அமெரிக்க நடிகர், ஹிப் ஹாப் இசைக்கலைஞர் மற்றும் தொழில்ரீதியான மல்யுத்த வீரர்.

தொழில் ரீதியான மல்யுத்தத்தில் ஜான் ஏழு முறை உலகச் சேம்பியனாக இருந்தவர். அவர் WWE சேம்பியன்ஷிப்பை ஐந்து முறையும் வேர்ல்ட் ஹெவிவெயிட் சேம்பியன்ஷிப்பை இரண்டு முறையும் வென்றிருக்கிறார். கூடுதலாக WWE யுனைட்டட் ஸ்டேட்ஸ் சேம்பியன்ஷிப் மூன்று முறையும், வேர்ல்ட் டேக் டீம் சேம்பியன்ஷிப்பை இரண்டு முறையும் ஜான் வென்றிருக்கிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ஹாலிவுட் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இதில் WWE ஸ்டார் ஜான் சீனா கலந்து கொண்டார்.

அவர் தனது x தள பதிவில் அம்பானி குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஷாரூக் அவர்களை சந்தித்தது வாழ்வின் உன்னத தருணம் எனவும் நேர்மறையான சிந்தனையுடன் இருப்பது குறித்து அவரிடம் கற்றுக்கொள்ளலாம் எனவும் பகிர்ந்துள்ளார்.

ஜான் சீனா ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ஷாருக்கான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடியிருந்தார்.அந்த வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/reel/C3d6rAgPrjx/?utm_source=ig_web_copy_link

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 164

    0

    0