நூல் விலை உயர்வால் தொடரும் ஸ்டிரைக்.. மீண்டும் மீண்டும் கடிதம் போட்ட Cm ஸ்டாலின்… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?

Author: Babu Lakshmanan
17 May 2022, 2:35 pm

சென்னை : பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பருத்தி நூல்‌ விலை வரலாறு காணாத வகையில்‌ தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால்‌ தமிழ்நாட்டில்‌ ஜவுளித்தொழிலும்‌, அதை நம்பியுள்ள நெசவாளர்களும்‌, தொழிலாளர்களும்‌ கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாகச்‌ சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின்,‌ “பருத்தி நூல்‌ விலை உயர்வை உடனடியாக தடுத்திடவும்‌, நெசவாளர்களுக்கு ஏற்படும்‌ இடையூறுகளை விரைவில்‌ களைந்திடவும்‌” மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை முன்‌ வைத்து பிரதமர்‌ நரேந்திரமோடி அவர்களுக்கு நேற்றைய தினம்‌ கடிதம்‌ எழுதியிருந்தார்‌.

அதில்‌ மிக முக்கியமாக தொழில்துறையிலும்‌. நெசவாளர்கள்‌ மத்தியிலும்‌ அதிகரித்து வரும்‌ அதிருப்தி கவலையளிப்பதாகவும்‌, பிரதமர்‌ அவர்கள்‌ உடனடியாக தலையிட்டு
இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தியிருந்தார்‌.

இந்த நிலையில்,‌ ஈரோடு. திருப்பூர்‌ உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில்‌ நெசவாளர்கள்‌ தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும்‌ பாதிப்பு அவர்களை தொடர்‌ போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளை சந்திக்கும்‌ ஐவுளித்‌ தொழிலில்‌ ஒரு அசாதாரணமான சூழல்‌ உருவாகியிருக்கிறது.

ஆகவே, இவற்றையெல்லாம்‌ மனதில்‌ கொண்டு- திராவிட முன்னேற்றக்‌ கழக நாடாளுமன்ற குழு துணை தலையர்‌ திருமதி கனிமொழி அவர்கள்‌ தலைமையில்‌ மேற்கு மாவட்டங்களில்‌ உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ இனைந்து சென்று மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர்‌ நிர்மலா சீத்தாராமன்‌ அவர்களையும்‌, ஜவுளித்துறை அமைச்சர்‌ திரு பியூஷ்‌ கோயல்‌ அவர்களையும்‌ நாளைய தினம்‌ (18.5.2022) சந்தித்து நெசவாளர்கள்‌ பிரச்சினைக்கு உடனடித்‌ தீர்வு காண வேண்டும்‌ என்று நேரில்‌ வலியுறுத்துமாறு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தி இருக்கிறார்‌.

நெசவாளர்களின்‌ கோரிக்கைகள்‌ நிறைவேறவும்‌, அவர்களின்‌ இன்னல்களை நீக்கவும்‌ தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மத்திய அரசினையும்‌ தொடர்ந்து வலியுறுத்தும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

நூல் விலை உயர்வால் திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 2வது நாளாக இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 965

    0

    0