50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து… சிறுவன் உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலி ; ஏற்காட்டில் சோகம்..!!

Author: Babu Lakshmanan
30 April 2024, 9:27 pm

சேலம் – ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மலை பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: ரகசிய சர்வேயில் திருப்தி அடையாத CM ஸ்டாலின்…? 6 அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு.. ஜூன் 4-க்கு பிறகு நடக்கப்போகும் அதிரடி…!!!

காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…