என் செருப்புக்கு கூட நீங்கள் சமம் கிடையாது… எங்க மாநிலத்துக்கு நீங்க ஒரு சாபக்கேடு.. அமைச்சர் பிடிஆர் மீது அண்ணாமலை காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan31 August 2022, 9:27 pm
அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், அந்த விவகாரம் திமுக மற்றும் பாஜகவினரிடையே பெரும் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை தனது ட்விட்டரில் பக்கத்தில் அமைச்சர் பிடிஆர் மீது கடும் வார்த்தைகளை முன் வைத்து சாடியுள்ளார்.
அந்தப்பதிவில், திரு பிடிஆர் அவர்களே உங்க பிரச்சனையே இதுதான்.. நீங்களும் உங்க கூட்டமும் முன்னோர்களின் முதல் எழுத்துகளில் (இனிஷியல்) வாழ்பவர்கள். உங்களுக்கு தெரியாது ஒரு விவசாயி படும் கஷ்டமும், அந்த விவசாயத்தை பெருமையாக செய்யும் அவரது மகனையு உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பரம்பரை பணக்காரராக, பிறக்கும் போதே வெள்ளி அகப்பையில் பிறந்த நீங்களும் உங்க கூட்டமும் இந்த ஜென்மத்தில் நீங்கள் எதையாவது பயனுள்ளதாக செய்துள்ளீர்களா? நீங்கள் அரசியலுக்கும் எங்கள் மாநிலத்திற்கும் ஒரு சாபக்கேடு.
விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் போல பல சாமானியர்கள் இன்னும் எங்களை போன்றவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் என்னுடைய செருப்புக்கு கூட தகுதியான ஆள் கிடையாது. உங்களோட நிலைக்கு ஒரு போதும் நான் இறங்கி வரமாட்டேன் கவலைப்பட வேண்டர் என காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.