உங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் லக் இல்லை.. வேறு சின்னத்தை தேர்வு செய்யுங்க : சீமானுக்கு நீதிமன்றம் அட்வைஸ்!
நாம் தமிழர் கட்சிக்கு 2024வது ஆண்டு சோதனையான ஆண்டு என்றே தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கமே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கட்சி சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது, இதனால் சீமான் கடும் அப்செட்டில் உள்ளார், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.
ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஆகியதா என்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இது சீமான் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தை பிஏபி கட்சியிடம் இருந்து கேட்டு பெறும் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டனர். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தங்களது கட்சிக்கே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கும் தொடர்ந்தது நாம் தமிழர் கட்சி.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது தலைமை நீதிபதி, நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல. ஒரு கட்சிக்கு குறிப்பிட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் இருந்தால்தான் நிரந்தரமாக ஒரு சின்னத்தை ஒதுக்கவும் கோரிக்கை வைக்க முடியும்.
கரும்பு விவசாயி சின்னம் என்பது பொதுவான சின்னம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. இதனைத்தான் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நடைமுறையாக பின்பற்றுகிறது.
இந்த நடைமுறையை எப்படி மாற்றிவிட முடியும்? நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் லக்கியான சின்னமாக இல்லை போல தெரிகிறது. ஆகையால் வேறு ஒரு சின்னத்தை தேர்வு செய்து போட்டியிடலாம் என கருத்து தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையையும் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். இது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே…
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
This website uses cookies.