அவரு அப்படி பேசியிருக்காரு.. நீங்க ஒரு கண்டனம் கூட சொல்லல.. ஏன்? CM ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.
ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: வீடு ஒதுக்குவதாக கூறி தம்பதியிடம் ₹1.20 லட்சம் மோசடி : ஆட்களை வைத்து மிரட்டும் காங்., கவுன்சிலர்!
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.
கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.
எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது என விமர்சித்துள்ளார்.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.