என் தங்கமகனே நீ ஜெயிக்கணும்.. சீமானை கட்டித் தழுவி கண்கலங்கிய மூதாட்டி : நெகிழ வைத்த வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 2:10 pm

என் தங்கமகனே நீ ஜெயிக்கணும்.. சீமானை கட்டித் தழுவி கண்கலங்கிய மூதாட்டி : நெகிழ வைத்த வீடியோ!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளாராக சீமான் உள்ளார். சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையிலான தேர்தலிலும் தனித்தே களமிறங்கி வருகிறார்.

தமிழ் தேசியம், ஊழலற்ற ஆட்சி நிர்வாகம், தற்சார்பு பொருளாதாரம் உள்ளிட்டவற்றை கொள்கையாக வைத்து சீமான் பயணித்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் 50:50 என்ற அடிப்படையில் அவரது கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி வருகிறார்.

இருப்பினும் தற்போது வரை சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் யாரும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் சீமான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதன்பிறகு வடமாநிலங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தென்மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சட்டசபை தொகுதி வாரியாக சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

மேலும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை நாம் தமிழர் கட்சியினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் சீமானை சந்திக்கிறார். அப்போது அவர், ஜெயிச்சிடு மகனே.. இந்த முறை கண்டிப்பாக ஜெயிச்சிடனும்.. என் தங்க மகனே.. இந்த நாட்டில் நீங்கள் ஜெயிச்சி வரணும்’ எனக்கூறி கண்கலங்குகிறார்.

மேலும் சீமானை கையெடுத்து கும்பிட்டு அவர் ஜெயிக்க வாழ்த்து தெரிவிப்பதோடு அவரை அன்பாலும், பாசத்தாலும் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார்.

இந்த அளவுக்கடந்த பாசத்தில் உருகிய சீமான், நீங்க கலங்காதீங்க.. உங்கள் மகன் கண்டிப்பாக ஜெயிப்பான் எனக்கூறி பாட்டியை சமாதானம் செய்தார். இந்நிலையில் சீமான்-பாட்டி இடையே நடந்த இந்த உருக்கமான உரையாடலை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!