2023ன் சிறந்த ஜோக்… முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டிய பாஜக தேசியக்குழு உறுப்பினர் குஷ்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 4:43 pm

2023ன் சிறந்த ஜோக்கை சொல்லிருக்கீங்க முதலமைச்சரே… ஸ்டாலினை சீண்டிய பாஜக தேசியக்குழு உறுப்பினர் குஷ்பு!!

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சொல்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏன் பயம் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

அறுவைச் சிகிச்சை காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நடிகை குஷ்பு தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸ்க்கு திரும்பியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘இந்தியா’ கூட்டணியை பார்த்த பயத்தில் பாஜகவுக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக விமர்சித்திருந்தார்.

அந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மம்தாவா? கெஜ்ரிவாலா? நிதிஷா? சரத்பவாரா? என எல்லா தலைவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல முடிந்தால் மோடியை எதிர்த்து வென்று காட்டட்டும் என இந்தியா கூட்டணிக்கு குஷ்பு சவால் விடுத்துள்ளார். இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக் என விமர்சித்துள்ளார்.

அதேபோல் முடிந்தால் ராகுல் மீண்டும் அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் என சவால் விடுத்துள்ளார். திமுக மீதும் காங்கிரஸ் மீதும் அனல் கக்கும் குஷ்பு, ஒரு காலத்தில் அந்த இரண்டு கட்சிகளுக்காகவும் பிரச்சாரம் செய்தவர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பிரதமர் மோடியை இந்தியா கூட்டணியினருக்கு வேண்டுமானால் பிடிக்காமல் போகலாம் ஆனால் இந்தியர்களுக்கு பிடித்துள்ளதாக பஞ்ச் டயலாக் அடித்திருக்கிறார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி