பொங்கலுக்கு மக்களை நல்லா புலம்ப வைச்சிட்டீங்க.. CMக்கும் அவரது மகனுக்கும் சினிமா ரிவியூ சொல்ல தான் நேரம் இருக்கு.. ஜெயக்குமார் விளாசல்!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 4:22 pm

பொங்கலுக்கு மக்களை நல்லா புலம்ப வைச்சிட்டீங்க.. CMக்கும் அவரது மகனுக்கும் சினிமா ரிவியூ சொல்ல தான் நேரம் இருக்கு.. ஜெயக்குமார் விளாசல்!

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அப்போது முதல், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு வருகின்றன.

புதிய பேருந்து நிலையம் என்பதால், பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, ஜனவரி 14 வரை முன்பதிவு செய்யப்பட்ட விரைவு போக்குவரத்து கழக (SETC)பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

எனினும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஏராளமானோர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்யாதவர்களும் ஆயிரக்கணக்கானோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏற வந்தனர். அவர்களுக்கு அங்கு பேருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, அங்கிருந்தே அவர்கள் செல்ல பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு.

பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு. மக்கள் படும் பாட்டை எல்லாம் எப்படி பார்ப்பார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 338

    0

    0