பாகிஸ்தானில் சுதந்திர தினத்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமை: 5 நாள் பல பேர்: அதிர்ச்சியில் உறைந்த உலகம்…!!

Author: Sudha
17 August 2024, 11:30 am

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைகள் கால்கள் துணிகளால் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் வீதியில் கிடந்துள்ளார்.அவரிடம் விசாரித்ததில் அவர் ஐந்து நாட்கள் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்தது.

அந்த இளம் பெண் தான் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் எனவும் பாகிஸ்தானில் தம்சுதீன் என்பருடன் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். அவர் தம்சுதீன் என்பவருடன் தங்கி இருந்ததை விசாரணைக்கு பிறகு போலீசார் உறுதி செய்தனர்.

தம்சுதீனை கைது செய்து விசாரித்த போது அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் அந்த பெண்ணிடம் இல்லை என தெரிவித்தார் மேலும் அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறினார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அந்த பெண் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் பதிலளிக்கும் அளவிற்கு நல்ல மனநிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பெல்ஜிய தூதரக அதிகாரிகள் குறிப்பிடும் பொது அவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான எந்த தகவலும் இல்லை ஆயினும் எந்த நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதும் அவருடன் இந்த நேரத்தில் உடன் நிற்பதும் நமது கடமை என தெரிவித்தனர்.

பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 178

    0

    0