வேடிக்கை பார்க்க போனவருக்கு நேர்ந்த கதி: வம்பிழுத்துக் கொன்ற குடிமகன்கள்: திருச்சியில் பயங்கரம்..!!
Author: Sudha3 August 2024, 2:10 pm
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன்(18).இவர் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் உள்ள அவருடைய மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அவரின் மாமா மகன் சந்தோஷ் என்பவருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் அதிக நீர் வருவதால் அதனை ரசிப்பதற்காக கீதாபுரம் பகுதிக்கு சென்றுள்ளார்.
ரஞ்சித் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் கீதாபுரம் பகுதியில் காவிரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் மது அறிந்து கொண்டிருந்த ஐந்து பேர் ரஞ்சித் மற்றும் சந்தோஷ் இருவரையும் நீங்கள் யார் ? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? என கேட்டுள்ளனர் அப்பொழுது ஏற்பட்ட தகராறில் அவர்கள் அனைவரும் சேர்ந்து ரஞ்சித் கண்ணனை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ரஞ்சித் கண்ணனை சந்தோஷ் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது ரஞ்சித்துக்கு மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்தை அனுமதித்தார்
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்து நவீன் குமார் (23), விஜய் (23) மற்றும் 17 வயதான 2 பள்ளி மாணவர்கள் என நான்கு பேரை கைது செய்துள்ளனர் மேலும் இந்த வழக்கு தொடர்பாக சரித்திர பதிவேடு குற்றவாளியான சுரேஷ் என்கிற சுளிக்கி சுரேஷ் (26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
எதற்காக ரஞ்சித்தை அவர்கள் 5 பேரும் தாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.