விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ், வயது 33 ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
கடந்த 2016ம் ஆண்டு, திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றவர், அங்கு மதுபாட்டில்களை திருடியதாகவும், விற்பனையாளர் உள்ளிட்டோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம் மேற்கு போலீசார் அற்புதராஜ் மீது வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணைக்கு, விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இவர் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு கடந்த மே மாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதன்பேரில் அற்புதராஜை நேற்று முன்தினம் விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபின், மாஜிஸ்திரேட் கோர்ட்டடில் ஆஜர்படுத்தி, விழுப்புரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு, சிறையில் இருந்த பிற விசாரணை கைதிகள் எழுந்த நிலையில், அற்புதராஜ் எழுந்திருக்கவில்லை. சிறை காவலர்கள் சென்று பார்த்தபோது, அவர் மயங்கி நிலையில் இருந்தார். உடன் அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
கிளைச் சிறை கண்காணிப்பாளர் நைனார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அவர் இறந்ததற்கான முழு விபரமும் தெரியவரும்’ என்றனர்.
அற்புதராஜின் உறவினர்கள் கூறுகையில், ‘போலீசார் தாக்கியதால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.