பப்பில் தோழிகளுடன் நடனமாடும் போதே வந்த மரணம்: துடித்து பலியான இளைஞர்….!!

Author: Sudha
18 August 2024, 6:03 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் ராமாபுரத்தில் உள்ள பி.ஜி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் முகமது சுகைல் நேற்று இரவு பெண் தோழிகளுடன் சேர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.

நடனமாடிக்கொண்டிருந்த போது முகமது சுகைல் திடீரென மயக்கமடைந்தார். அவர் சுயநினைவின்றி இருந்த நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!