49 லவ் ஸ்டோரி: 5 கல்யாணம்: கல்யாண மன்னனை ஸ்கெட்ச் போட்டு தட்டித் தூக்கிய போலீஸ்…!!

Author: Sudha
4 August 2024, 11:21 am

ஒடிசாவில் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்த பலே ஆசாமியை போலீசார் ஸ்கெட்ச் போட்டு கைது செய்தனர்.

ஒடிசாவைச் சேர்ந்த சத்யஜித் மனகோவிந்த் சமால்,வயது 34 மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார்.

இதுவரையில் 5 பெண்களை திருமணம் செய்தும், 49 பெண்களை காதலித்தும் ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களை சுருட்டி வந்துள்ளார்.

பெண்களை ஏமாற்றி மன்மதனாக வலம் வந்த சமாலை கைது செய்ய போலீசார் ஒரு திட்டம் தீட்டினர். அந்த திட்டத்தின் படி பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மணமகன் தேவைப்படுவதாக மேட்ரிமோனி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்தனர்.இதனைப் பார்த்த சலாம், அவரை திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாகக் கூறி அணுகியுள்ளார். அவரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். பின்னர், நடத்திய விசாரணையில், பெண் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, துபாய்க்கு தப்பிச் சென்று செட்டில் ஆகி விட திட்டம் போட்டிருந்ததாக சலாம் கூறியுள்ளார்.

சமாலால் பாதிக்கப்பட்ட பெண், முதலில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று 8.15 லட்சம் மதிப்பிலான காரை வாங்கியுள்ளார். மேலும் தொழில் தொடங்க 36 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

மற்றொரு பெண், வங்கியில் கடன் வாங்கி 8.60 லட்சம் பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும் சமாலுக்கு கொடுத்துள்ளார். இந்த பணத்தின் மூலம் சமால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, பணத்தை திரும்ப கேட்டபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்துள்ளார்.

அவரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், 2.10 லட்சம் ரொக்கம், கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் திருமணம் செய்துகொண்டதற்கான இரண்டு ஒப்பந்த சான்றிதழ்களை போலீசார் கைப்பற்றினர். சமலின் மூன்று வங்கிக் கணக்குகளையும் போலீசார் முடக்கினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 317

    0

    0