‘எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது’.. மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் போட்ட திட்டம்… வாக்குமூலத்தில் வெளியான பகீர் தகவல்

Author: Babu Lakshmanan
14 October 2022, 9:42 am

கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவியான சத்யாவுடன் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல, பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டு இருந்த போது, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் தண்டவாளத்தில் விழுந்த சத்யா, தலை துண்டாகி உயிரிழந்தார்.

chennai murder - updatenews360

இதையறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காதலியை கொலை செய்த சதீஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை பிடிக்க ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைத்து தேடப்பட்டது.

இதனிடையே, கொல்லப்பட்ட மாணவி சத்யா, ஆதம்பாக்கம் காவல்நிலைய தலைமை காவலர் ராமலட்சுமியின் மகள் என தெரிய வந்துள்ளது. அதேபோல, கொலை செய்த சதீஷ் ஓய்வுபெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

chennai murder - updatenews360

இந்த நிலையில், சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்டு மனமுடைந்து போன அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஏற்கனவே, மகளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்திருப்பது அடுத்தடுத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த காதலன் சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், குற்றவாளியான சதீஷ் பகீர் தகவல்களை வெளியிட்டார்.

chennai murder - updatenews360

காதலிக்க மறுத்ததால் சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்ததாகவும், தனக்கு கிடைக்காத மாணவி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் சதீஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும், சத்யாவை கொலை செய்த பிறகு தானும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும் அவர் போசீலாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் சதீஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 499

    0

    0