மனைவி கர்ப்பம்.. எதிர்வீட்டு சிறுமியுடன் தவறான சகவாசம் : உயிரை பறித்த தகாத உறவு!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2024, 10:43 am
17 வயது சிறுமியை கள்ளக்காதலில் விழ வைத்து நடுக்காட்டில் பாலியல் பலாத்காரம் செய்து உயிரை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பத்வேல் ராமாஞ்சநேய நகரை சேர்ந்த 17 வயதான தஸ்தகிரியம்மா அங்குள்ள பி.ஜே.எஸ்.ஆர் கல்லூரியில் இண்டர்மிடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவருக்கும் அவரது வீட்டிற்கு எதிரே வசித்த 19 வயது ஜக்கலா விக்னேஷ் என்பவருடன் சிறு வயது முதல் பழகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை காதலித்து விக்னேஷ் திருமணம் செய்து கொண்டார்.
இவரது மனைவி தற்போது கர்பமாக உள்ள நிலையில் விக்னேஷ் மனைவியுடன் கடப்பா நகரில் வசித்து கொண்டே தஸ்தகிரியம்மவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்திற்கு ஒருநாள் முன்பு விக்னேஷ் போன் செய்து தஸ்தகிரியம்மாவை தான் சொல்லும் இடத்திற்கு வரும்படி கூறி உள்ளார்.
இதனால் காலை சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி தஸ்தகிரம்மா ஆட்டோவில் சென்றுள்ளார்.
அதற்கேற்றார்போல் விக்னேஷ் கடப்பாவில் இருந்து காலை 5.30 மணிக்கே தனது செல்போனை பயன்படுத்தி நாள் மாட்டிகொள்வோம் என அவரது மனைவி செல்போனை எடுத்து கொண்டு பைக்கில் பெட்ரோல் பிடித்து கொண்டு பின்னர் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை தனது பைக்கில் இருந்து பிடித்து தனது பையில் வைத்து கொண்டு பத்வேல் வந்துள்ளார்.
இதையும் படியுங்க: நானும் உன்கூட தான் வருவேன்.. தங்கத்திற்கு நிகராக உயரும் வெள்ளி விலை!
பின்னர் தஸ்தகிரியம்மாவை பி. பி. குந்தா செஞ்சுரி பிளைவுட் ஃபேக்டரிக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்லி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விக்னேஷ் பேசி கொண்டே தஸ்தகிரியம்மாவை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் அவர் கழுத்தை நெறுத்தி கீழே தள்ளிவிட்ட நிலையில் அந்த பெண் மயகியதால் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
பின்னர் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்படி போலீசார் மீட்டு பத்வேல் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடப்பா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீக்காயங்கள் வார்டில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு இறந்தார்.
இறப்பதற்கு முன்பு தஸ்தகியம்மா கொடுத்த தகவலின்படி விக்னேஷை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு விக்னேஷ் கடப்பா ஓம்சாந்தி நகரில் இருப்பதை அறிந்த போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது தஸ்தகிரியம்மா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால் அவரிடமிருந்து வரும் அழுத்தத்தைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு வரவழைத்து கொன்றதாக தெரிவித்தார்.
தஸ்கிரியம்மா தீ வைக்கப்பட்ட இடத்தில் இருந்து தஸ்தகிரியம்மா ஆடைகள், வகுப்பு புத்தகங்கள் அடங்கிய பை, பாதி எரிந்த காலி பெட்ரோல் பாட்டில், ஒரு சிகரெட் துண்டு, எரிந்த துணிகளின் சாம்பல் போன்றவை தடவியியல் ஆதாரங்களுடன் சேகரித்து இதுபோன்ற குற்றங்களை விரைவில் தண்டனை கிடைக்கும் விதமாக அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றத்தில் வழக்கு உரிய ஆதாரங்களுடன் சமர்பித்து அதிகப்பட்ச தண்டனை பெற்று தரப்படும் என கடப்பா எஸ்.பி. ஹர்ஷவரதன் ராஜு தெரிவித்தார்.