16 வயது மாணவியை திருமணம் செய்து, அவருடன் நெருக்கமாக இருந்த சீக்ரெட் வீடியோவை வைத்து, மாணவியின் தாயை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த இன்ஸ்டாகிராம் காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஊழியர் மார்க்கபந்து, முன்னாள் கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் மகன் கோகுல் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கோகுல், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து ஏற்பாடு செய்திருப்பதாக மாணவியிடம் போன் மூலம் கூறியுள்ளான். மேலும் தான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படி மாணவியிடம் கூறி உள்ளான்.
அதன் அடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி அந்த மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி அவன் தங்கிருந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது கோகுல் தான் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டி உள்ளான். இதனைத் தொடர்ந்து கோகுல் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.
இருவரும் உல்லாசமாக இருந்ததை கோகுல் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தான். இந்நிலையில் கோகுலுடனான காதல் விவகாரம், மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் கோகுல் மாணவியின் தாயிடம் லாவகமாக பேசி தொடர்ந்து மாணவியிடம் பழகி வந்துள்ளான்.
இந்த நிலையில், திடீரென மாணவியின் தாய்க்கு கோகுல் போன் செய்து தனக்கு உடனடியாக 10,000 ரூபாய் பணம் வேண்டும் என்றும், தரவில்லை என்றால் மாணவியுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளான். மேலும் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை, தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மாணவியின் தாயிடம் கோகுல் போனில் மிரட்டியுள்ளான்.
தன்னுடைய தாய் வயதில் உள்ள மாணவியின் தாயை உல்லாசத்திற்கு அழைத்த கோகுலின் செயலால் அதிர்ச்சி அடைந்தார் மாணவி தாய். இதனால் செய்வதறியாது தவித்த மாணவியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் கோகுல் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
படிக்கும் வயதில் இணையத்தில் முழ்கி தவறான சேர்க்கை வைத்தால், வாழ்க்கையை தொலைத்து நிற்பதுடன், தங்களுடைய குடும்பத்திற்கும் களங்கமும், அவமானமும் ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் எடுத்துகாட்டு.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.