ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி ஜெகன் மோகன் தாயார் விஜயம்மா அனந்தபுரம் மாவட்டம் குத்தியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று குடும்பத்தினருடன் ஐதராபாத் சென்று கொண்டுருந்தார்.
அப்போது வழியில், கர்னூல் நகரின் பி.கேம்பில் தங்கியிருந்த டாக்டர் அய்யாபுரெட்டி (ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் நண்பர்) வீட்டுக்குச் செல்ல விரும்பினார்.
இதற்காக கர்னூல் ஆர்டிசி காலனி அருகே கார் சென்றபோது காரின் இடதுபுறம் இருந்த இரண்டு டயர்களும் ஒரே நேரத்தில் திடீரென வெடித்தன. வாகனம் குறைந்த வேகத்தில் சென்றதால் டிரைவர் உஷாராகி உடனடியாக காரை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவீர்க்கப்பட்டு விஜயம்மா உயிர் தப்பினார்.
பின்னர் எஸ்கார்ட் வாகனத்தில் அய்யாப்புரெட்டியின் வீட்டுக்குச் சென்று உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரைப் பார்வையிட்டார். அதன் பிறகு மாற்று வாகனத்தில் ஐதராபாத் சென்றார்.
இந்த வாகனம் ஆறு மாதங்களுக்கு முன் வாங்கப்பட்ட உயர்ரக சொகுசு காராக உள்ள நிலையில் திடிரென காரின் டயர்கள் இரண்டும் ஒரே நேரத்தில் வெடித்ததில் விஜயம்மா உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் சில மாதங்களுக்கு பிறகு விஜயம்மா அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் கார் டயர் வெடித்த சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த கார் வீடியோவை பதிவு செய்த தெலுங்கு தேச கட்சி தனது அதிகார பூர்வ சமூக வலைதளத்தில் சாலையோரம் இருக்கும் இந்த விலையுயர்ந்த கார் யாரே ஒருவருக்குண்டானது இல்லை.
நூற்றுக்கணக்கான பேரை வைத்துக்கொண்டு இருக்கும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரரான ஜெகன் மோகன் ரெட்டி தாயாரும் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மனைவி விஜயம்மா சென்ற வாகனம் இது.
அவரது பாதுகாப்பு, புத்தம் புதிய கார், அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட கார் என இவ்வளவு இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டு சக்கரங்கள் வெடித்துள்ளது.
இவ்வளவு ஹை என்ட் காரைப் பார்த்ததும், புதிய காருக்கு இப்படி இவ்வாறு நடந்தது என பலரும் முதலில் ஆச்சரியப்பட்டு பிறகு நமது சைக்கோ ( ஜெகன் மோகன் ) பின்னணியை அறிந்து என்ன நடந்தது என்று யூகித்தனர்.
இவை அனைத்தும் 2024 தேர்தலுக்கு முன் நடந்தவை. 2019 தேர்தலுக்கு தனது சித்தப்பாவை கொன்றது போல இந்த தேர்தலுக்கு ஜெகன் மோகன் இன்னொரு பெரிய தலையை குறிவைப்பாரா ? என்று ஆந்திர மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்தது.
சம்பவத்திற்கு பிறகு விஜயம்மா அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தம் என தெரிவித்திருந்தது.
இந்த பதிவு தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவிற்கு முழு ஆதரவு தெரிவித்து தேர்தலிலும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு ஆதரவு திருட்டினார்.
மேலும் சொத்து பிரச்சனையில் மகளுக்கு ஆதரவாக நின்றுள்ள நிலையில் இது குறித்து வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் பவன் கல்யாண் ஒரு கட்சி தலைவரின் ( ஜெகன் மோகனின் தங்கை ) என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கிறார்.
உங்கள் அண்ணன் உங்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் இருந்திருக்கலாம் ஆனால் உங்கள் உயிரை நாங்கள் காப்போம். நீங்கள் எங்களை விமர்சிக்கலாம் மதசார்பின்மை இருக்கும் வரை நீங்கள் விமர்சித்தாலும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம்.
இது எங்கள் பொறுப்பு நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக உள்ளீர்கள் எனவே உங்கள் பாதுகாப்பிற்கு விண்ணபித்தால் முதல்வருடன் பேசி உங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறி உள்ளார்.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.