பாஜகவின் துணையோடு IAS, IPS அதிகாரிகளுக்கு மன உளைச்சல்… சந்திரபாபு நாயுடு மீது அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 2:27 pm

பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா, கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றி பெற முயற்சித்திருப்பதாகவும் அமைச்சர் ரோஜா குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தமிழர்கள் அதிகமாக உள்ள ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் காணும் நடிகை ரோஜா திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார். அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை செய்யப்பட்டது.

மேலும் படிக்க: மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பே இல்ல.. குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்தே ஆகனும் ; ராமதாஸ் வலியுறுத்தல்!

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நடிகையும், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் தற்போதைய நகரி தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான ரோஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், அருணாச்சலேஸ்வரரின் ஆசிர்வாதத்தோடு பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னேறி செல்வதாகவும், கிரிவலத்தை முடித்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கடவுளின் அருள் தனக்கு இருக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், மக்களை நேசிக்கும் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக முதல்வராக ஆக வேண்டும் எனவும், தானும் மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற வேண்டும் என அருணாச்சலேஸ்வரரிடம் வேண்டுதலை வைத்திருப்பதாகவும் கூறினார்.

ஆந்திராவில் தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பின்பும் வன்முறைகள் நடைபெறுவது குறித்தும், அரசு அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், “பாஜக, தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணியில் தேர்தலை சந்திப்பதால் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி, எளிதாக தேர்தலில் வெற்றி பெற முயற்சித்திருப்பதாகவும், கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் பணியிட மாற்றம் செய்வது அவர்கள் மீது விசாரணை அமைப்பது, அதிகாரிகளுக்கு அதிக அளவில் மன உளைச்சலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஆந்திரா மக்கள் தெளிவாக இருப்பதாகவும், ஆந்திர மக்களுக்காக பாடுபட்டவர்கள் யார் நல்லது செய்தவர்கள் யார் என அறிந்திருப்பதாகவும், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் அனைவருக்கும் மக்களின் முழு ஆதரவு இருப்பதாகவும் கூறினார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?