தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்கம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2022, 8:38 pm
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி சோதனையில் தங்க நகைகள் 11.153 கிலோ கிராம், வெள்ளி சுமார் 118.506 கிலோ கிராம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படும், கணக்கில் வராத ரூ.84 லட்சம் பணமும் அதோடு கைபேசிகள் பல வங்கி பெட்டகங்களின் சாவிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்குகள் மற்றும் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் 34 லட்சம் ரூபாய் அளவிற்கு கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.